ஆன்மிகம்

சிவராத்திரியன்று நடந்தவை

Published On 2018-02-13 09:23 GMT   |   Update On 2018-02-13 09:23 GMT
சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு உள்ளது. சிவராத்திரி அன்று நடந்த சில முக்கியமான நிகழ்வுகளை பார்க்கலாம்.
• சிவபெருமான் காலனை உதைத்தார்.
• லிங்கோற்பவராக ஈசன் தோன்றினார்.
• பரமனின் உடலில் பாதியாக பார்வதி இடம் பிடித்தாள்.
• உமையவள், மகேசனிடம் ஆகம உபதேசம் பெற்றாள்.
• கண்ணப்ப நாயனார் சிவலிங்கத்தில் தன் கண்ணை அப்பினார்.
• பகீரதன், கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தார்.
• சிவபெருமான் நஞ்சு உண்டார்.

ஜடாமுடி சிவலிங்கம்!

சிவனுக்கே உரித்தான ஜடாமுடியுடன் கூடிய லிங்கத்தை, திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகிலுள்ள சிவசைலம் சிவசைலநாதர் கோவிலில் மட்டும்தான் காண முடியும். லிங்கத்தின் பின்னால் உள்ள ஜடாமுடியை, பின்புறச் சுவரிலுள்ள துவாரம் வழியாக தரிசிக்கலாம்.
Tags:    

Similar News