ஆன்மிகம்

சிவனுக்குப் பிரியம் அளிக்கும் சிவராத்திரி

Published On 2018-02-13 07:49 GMT   |   Update On 2018-02-13 07:49 GMT
சிவனுக்குப் பிரியம் அளிக்கும் மங்கள ராத்திரிதான் சிவராத்திரி. சிவம் என்றால் சுபம். சங்கரன் என்றால் சுபத்தை உண்டாக்குபவன்.
சிவராத்திரியன்று தேவாரம், திருமுறைகள், சிவபுராணம் ஆகியவற்றை படிப்பது நல்லது. ருத்ரம், சமகம் போன்றவற்றை ஜபித்தாலோ அல்லது வீட்டில் டேப்ரிக்கார்டரில் போட்டுக் கேட்பதாலோ மன அமைதியோடு வீட்டிலும் அமைதி நிலவும்.

பில்வாஷ்டகம், லிங்காஷ்டகம், வேத பாராயணம், (பெரியபுராணம்) சிவனடியார்களின் வரலாறு, தேவாரம் ஓதும் ஓதுவார்களுக்கும் வேத பண்டிதர்களுக்கும் காய்ச்சிய பசும் பாலில் கற்கண்டு, ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்களைப் போட்டு அவர்கள் அருந்துவதற்குத் தருவது ஆகியவை சிவராத்திரியன்று செய்யும் நற்காரியங்கள்.

இதைச் செய்ய இயலாதவர்கள் சிவநாமத்தை உச்சரித்து கோவிலுக்குச் சென்று சிவனுக்கு நடக்கும் ஒரு கால பூஜையையாவது தரிசிக்க வேண்டும். சிவம் என்றால் சுபம். சங்கரன் என்றால் சுபத்தை உண்டாக்குபவன். சிவனுக்குப் பிரியம் அளிக்கும் மங்கள ராத்திரிதான் சிவராத்திரி.
Tags:    

Similar News