ஆன்மிகம்

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை

Published On 2017-12-15 05:45 GMT   |   Update On 2017-12-15 05:45 GMT
நாமக்கல்லில் உள்ள 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயரின் மூலவர் சிலை, ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வாய்ந்த ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயரின் மூலவர் சிலை, இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 18 அடி உயரம் கொண்ட இந்த சிலை, ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலை 5-ம் நூற்றாண்டில் வடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலின் அருகில் இருக்கும் மலை மீது நரசிம்மர் கோவில் இருக்கிறது. கீழே ஆஞ்சநேயர் மூலவர் சிலை இருக்கும் இடத்தில் இருந்து, மேலே உள்ள நரசிம்மரை, அனுமன் வழிபட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆஞ்சநேயர் கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் திறந்திருக்கும். இந்த ஆலயத்தில் பங்குனி உத்திர விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அப்போது ஆஞ்சநேயரின் திருவுருவப் படம் ஊர்வலமாக துதி பாடல்களை இசைத்தபடி கொண்டுவரப்படுகிறது.

இத்தல ஆஞ்சநேயர் பலவித அலங்காரங்களில் காட்சி தருவார். இந்தியாவில் வேறு எந்த இடத்திலும் ஆஞ்ச நேயரை இத்தனை விதமான அலங்காரத்தில் தரிசிக்க முடியாது. சிறப்பு வழிபாடு நாட்களில், இத்தல இறைவனுக்கு லட்சம் வடை கொண்டு செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்படுகிறது.
Tags:    

Similar News