ஆன்மிகம்

பைரவரின் உடலில் நவக்கிரகங்கள்

Published On 2017-11-16 07:29 GMT   |   Update On 2017-11-16 07:29 GMT
காலத்திற்கு அதிபதியான, காலத்தின் வடிவமான பைரவரின் திருஉருவத்தில் 12 ராசிகளும், அவற்றிற்குரிய நட்சத்திரங்களும் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
ராகு-கேது எனப்படும் பாம்புகளை பூனூலாகத் தரித்திருப்பவர் பைரவர். மேலும் சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தியும் காட்சி தருவார். காலத்திற்கு அதிபதியான, காலத்தின் வடிவமான பைரவரின் திருஉருவத்தில் 12 ராசிகளும், அவற்றிற்குரிய நட்சத்திரங்களும் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தச் சிறப்புமிக்க வடிவத்தை, அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் மன்னன், தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை மல்லிகார்ஜூனர் கோவில் வளாகத்தில் நிர்மாணித்துள்ளான்.

தலை-மேஷ ராசி, வாய்-ரிஷப ராசி, கை-மிதுன ராசி, மார்பு- கடகம், வயிறு-சிம்மம், இடை-கன்னி, புட்டம்-துலா ராசி, லிங்கம்- விருச்சிகம், தொடை-தனுசு ராசி, முழந்தாள்- மகரம், காலின்கீழ் பகுதி- கும்பம், பாதம்- மீன ராசி என்று சாஸ்திர, ஜோதிட நூல்கள் சொல்கின்றன.
Tags:    

Similar News