search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவக்கிரகங்கள்"

    • சதயம் - ராகு
    • சுவாதி - ராகு

    அஸ்வினி-கேது

    பரணி-சுக்கிரன்

    கார்த்திகை-சூரியன்

    ரோகிணி-சந்திரன்

    மிருகசீரிஷம்-செவ்வாய்

    திருவாதிரை-ராகு

    புனர்பூசம்-குரு (வியாழன்)

    பூசம்-சனி

    ஆயில்யம்-புதன்

    மகம்-கேது

    பூரம்-சுக்கிரன்

    உத்திரம்-சூரியன்

    அஸ்தம்-சந்திரன்

    சித்திரை-செவ்வாய்

    சுவாதி-ராகு

    விசாகம்-குரு (வியாழன்)

    அனுஷம்-சனி

    கேட்டை-புதன்

    மூலம்-கேது

    பூராடம்-சுக்கிரன்

    உத்திராடம்-சூரியன்

    திருவோணம்-சந்திரன்

    அவிட்டம்-செவ்வாய்

    சதயம்-ராகு

    பூரட்டாதி-குரு (வியாழன்)

    உத்திரட்டாதி-சனி

    ரேவதி-புதன்

    1. ராமாவதாரம்&சூரியன்

    2. கிருஷ்ணாவதாரம்&சந்திரன்

    3. மச்சஅவதாரம்&கேது

    4. கூர்ம அவதாரம்&சனி

    5 வராக அவதாரம்&ராகு

    6. நரசிம்ம அவதாரம்&செவ்வாய்

    7. வாமன அவதாரம்&குரு

    8. பரசுராம அவதாரம்&சுக்கிரன்

    9. பலராம அவதாரம்&குளிகன்

    10. கல்கி அவதாரம்&புதன்

    • தங்களின் சாபப்பிணியை நீக்கியமையால் அவ்விநாயகர்க்கும் “கோள் வினை தீர்த்த விநாயகர்” என்று திருப்பெயர் சூட்டினர்.
    • அர்க்க வனமாக இருந்த இந்த இடத்தில் மக்கள் நடமாட்டத்தால் எருக்கங்காடு குறைந்து அழிந்தது.

    பிறகு நவநாயகர்கள் காலமுனிவரை அழைத்துகொண்டு தாங்கள் தவம் செய்த இடத்தை அடைந்து அங்கே பிரதிட்டை செய்த விநாயகரை நன்றி உணர்வோடு வணங்கினர்.

    தங்களின் சாபப்பிணியை நீக்கியமையால் அவ்விநாயகர்க்கும் "கோள் வினை தீர்த்த விநாயகர்" என்று திருப்பெயர் சூட்டினர்.

    பிறகு காலவ முனிவரிடம் தங்களுக்கென இவ்விடத்தில் தனிக்கோவில் அமைக்கும் படி கூறி மறைந்தனர்.

    காலவமுனிவர் நவநாயகரின் ஆணைப்படி அங்கே கோவில் அமைத்து நவக்கிரகப்பிரதிட்டை செய்து வழிப்பட்டார்.

    தலம் தலங்களாயின

    அர்க்க வனமாக இருந்த இந்த இடத்தில் மக்கள் நடமாட்டத்தால் எருக்கங்காடு குறைந்து அழிந்தது.

    பிராண நாதேசுவரர் எழுந்தருளியுள்ள மேற்குப் பகுதி திருமங்கலக்குடி என்றும், நவநாயகர்கள் ஆலயம் அமைந்துள்ள வடகிழக்குப்பகுதி சூரியனார் கோவில் என்றும் பெயர் பெற்று இரண்டு தலங்களாக அமைந்தன.

    • இங்கனம் தங்களது தொழுநோயும் நீங்கி, வரம் பெற்றனர்.
    • நவநாயகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

    இங்கனம் தங்களது தொழுநோயும் நீங்கி, வரம் பெற்றனர்.

    நவநாயகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

    அந்த நேரத்தில் காலவமுனிவர் அங்கே வந்து நவநாயகர்களின் கால்களில் வீழ்ந்து வணங்கி, "அடியேனுக்கு வரம் கொடுத்துவிட்டுத், தாங்கள் தொழுநோயால் வருந்தினீர்கள்.

    தங்களைத் துன்பத்துக்கு ஆளாக்கிய அடியேனை மன்னிக்கவேண்டும்" என்று சொல்லிக்கதறிக் கதறி அழுதார்.

    நவநாயகர்கள் காலமுனிவரைத் தேற்றிச் சமாதானப் படுத்தினார்.

    பிறகு " நீர் இங்கே எவ்வாறு வந்தீர்?" என்று வினவினர்.

    அது கேட்ட காலவ முனிவர், "நவநாயகர்களே! நீங்கள் விந்தியமலைக்கு வந்து அடியேனுக்கு வரம் தந்து மறைந்த பின்பு நான் மீண்டும் இமயமலைச்சாரலுக்குச் சென்று தங்கினேன்.

    அங்கே வந்த அகத்திய முனிவர், தங்களை அர்க்க வனத்தில் கண்டதையும், நீங்கள் தொழுநோயால் வருந்துவதையும் எடுத்தரைத்தார்.

    அதைக் கேட்டு மனம்பதைந்து தங்களைக் காண இங்கே வந்தேன்" என்றார்.

    • வழிபாட்டின் முடிவு நேரத்தில் பிராண நாதரும், மங்கல நாயகியும் நவநாயகர்களுக்குக் காட்சி கொடுத்தனர்.
    • பிராணநாதரை அணுதினமும் வழிபட்டனர்.

    தங்கள் உடம்பில் இருந்த தொழுநோய் பாதிக்குமேல் குணமாகி இருப்பது கண்டு வியந்தனர்.

    பிராணநாதரை அணுதினமும் வழிபட்டனர்.

    வழிபாட்டின் முடிவு நேரத்தில் பிராண நாதரும், மங்கல நாயகியும் நவநாயகர்களுக்குக் காட்சி கொடுத்தனர்.

    பிராண நாதர் நவநாயகர்களை நோக்கி, "நவக்கிரகர்களே உம்முடைய தவத்துக்கு மகிழ்ந்தோம்.

    உம்முடைய தொழுநோய் இந்நேரத்துடன் முற்றும் நீங்கும்.

    இந்த அர்க்க வனத்தின் வடகிழக்கில் நீங்கள் தங்கித் தவம் செய்த இடத்தில் உங்களுக்கு எனத் தனி ஆலயம் உண்டாகி அது உங்களுக்கு உரிய தலமாக விளங்கட்டும்.

    அங்கே வந்து உங்களை வழிபடுவோருக்கு நீங்கள் சுதந்திரமாக அனுக்கிரகம் செய்ய வரம் தந்தோம்" என்று கூறி மறைந்தருளினார்.

    • அங்கே விநாயகரைப் பிரதிஷ்டை செய்து சங்கல்பம் செய்து கொண்டு தவத்தை மேற்கொண்டனர்.
    • உதயாநிதி ஏழரை நாழிகைக்குள் எருக்க இலையில் ஒரு பிடி தயிர் அன்னத்தை வைத்துப் புசித்தனர்.

    அகத்தியரிடம் விடை பெற்றுக் கொண்டு நவக்கிரகர்கள் அர்க்க வனத்தின் வடகிழக்குப் பகுதிக்குச் சென்று ஒரு இடத்தை தேர்ந்து கொண்டனர்.

    அங்கே விநாயகரைப் பிரதிஷ்டை செய்து சங்கல்பம் செய்து கொண்டு தவத்தை மேற்கொண்டனர்.

    கார்த்திகை மாதம் முதல் ஞாயிறன்று நோன்பு தொடங்கி கடுமையாக எழுபத்தெட்டு நாட்கள் வரை கடைப்பிடித்தனர்.

    இந்த நோன்புக் காலத்தில் வரும் திங்கட்கிழமைகளில் விடிவதற்கு முன் காவிரியில் நீராடிப் பிராணநாதரை வழிபட்டனர்.

    உதயாநிதி ஏழரை நாழிகைக்குள் எருக்க இலையில் ஒரு பிடி தயிர் அன்னத்தை வைத்துப் புசித்தனர்.

    இவ்வாறு எழுபத்தெட்டு நாட்கள் நோன்பு முடித்து எழுபத்தொன்பதாம் நாள் திங்கட்கிழமை விடியலில் காவிரியில் நீராடி எழுந்தனர்.

    • அதுகேட்ட அகத்தியர் புன்முறுவல் செய்து, அது தேவ ரகசியம் என்றார்.
    • எருக்கின் சாரத்தில் ஒரு அணுப்பிரமானத்தைத் தனியாகப் பிரித்தெடுக்க இதுவே மருத்துவ வழி.

    அப்போது நவக்கிரகர்கள் அகத்தியரை நோக்கி, 'முனிபுங்கவரே! நாங்கள் தவமிருப்பதும், தீர்த்த நீராடுவதும் தவிர, எங்களை எருக்க இலைகளில் தயிரன்னத்தைப் புசிக்க சொன்னது என்ன காரணம்?' என்று கேட்டார்கள்.

    அதுகேட்ட அகத்தியர் புன்முறுவல் செய்து, "அது தேவ ரகசியம். இருந்தாலும் நீங்கள் விரும்பிக் கேட்பதால் சொல்கிறோம்.

    எருக்க இலையில் தயிரன்னத்தை வைத்தால் எருக்கிலையின் சாரத்தின் ஒரு அணுப்பிரமாண அளவு தொழுநோய்க்கு மருந்தாகித் தொழுநோயைக் குணப்படுத்தும்.

    எருக்கின் சாரத்தில் ஒரு அணுப்பிரமானத்தைத் தனியாகப் பிரித்தெடுக்க இதுவே மருத்துவ வழி.

    அதனால்தான் பிரமதேவன் இதனைத் தேவ ரகசியமாக மறைத்து உங்களிடம் கூறாமல் நோன்பு முறையை மட்டுமே கூறினார்" என்றார்.

    • பிரமதேவர் கூறிய வண்ணம் நவநாயகர்கள் பூலோகத்தை அடைந்து அர்க்கவனத்தைத் தேடி வந்து கொண்டிருந்தனர்.
    • அவர்கள் அர்க்கவனத்தை அடைந்ததும் காவிரியில் நீராடி பிராணநாதரையும், மங்கல நாயகியையும் வழிபட்டனர்.

    பிரமதேவர் கூறிய வண்ணம் நவநாயகர்கள் பூலோகத்தை அடைந்து பரத கண்டத்தின் தென் பகுதியான தமிழ்நாட்டில் காவிரி நதியின் வடகரை வழியாக அர்க்கவனத்தைத் தேடி வந்து கொண்டிருந்தனர்.

    தமக்கு முன்னே அவ்வழியில் அகத்தியர் செல்வதை கண்டு விரைந்து நடந்து அவரிடம் அணுகி வணங்கினார்கள்.

    தமக்கு நேர்ந்த சாப வரலாற்றைக் கூறி, "அர்க்கவனத்தைத் தேடுகிறோம். அது உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும்" என்றார்கள்.

    அகத்தியர் அவர்களைப் பார்த்து, "நாமும் அர்க்கவனத்திற்குத்தான் செல்கிறோம்.

    அங்கே பிராண நாதரை வழிபடச் செல்கிறோம்.

    அவ்வனத்திற்கு உங்களையும் அழைத்துப் போகிறோம். வாருங்கள்" என்று அழைத்து சென்றார்.

    அவர்கள் அர்க்கவனத்தை அடைந்ததும் காவிரியில் நீராடி பிராண நாதரையும், மங்கல நாயகியையும் வழிபட்டனர்.

    பிராண நாதரை அகத்தியர் வழிபடும் போது, அவர் தமது குறுங்கையை காவிரியாறு வரை நெடுங்கையாக நீட்டி நீரை முகந்து மீண்டும் குறுங்கையாகச் சுருக்கி அந்த நீரால் அபிஷேகம் செய்தார்.

    இந்த அற்புதத்தை நவக்கிரகங்கள் கண்டு அகத்தியரின் தவச்சிறப்பை நினைத்து நினைத்து விம்மிதம் உற்றனர்.

    இந்த நேரத்தில் காலவ முனிவரைப் பற்ற வேண்டிய தொழுநோய், பிரமனது சாபத்தால் நவக்கிரகர்களைப் பற்றியது.

    அவர்கள் அங்கமெலாம் குறைந்து அழுகிவருந்தி அகத்தியரை நோக்கித் தாங்கள் தவம் செய்ய வேண்டிய முறையை அறிவித்து அருளுமாறு வேண்டினர்.

    அகத்தியர், நவக்கிரகர்களின் துயர நிலையைக் கண்டு மிகவும் வருந்தினார்.

    அவர்கள் தவம் செய்ய வேண்டிய முறையை விளக்கத் தொடங்கினார்.

    "நவக்கிரகர்களே! நீங்கள் தவம் செய்வதற்கு இந்த அர்க்க வனத்தின் வடகிழக்குப் பகுதியைத் தேர்ந்து கொள்ளுங்கள்.

    அங்கு விநாயகரைப் பிரதிட்டை செய்து, தவம் விக்கினமில்லாமல் முடியப் பிரார்த்தனை செய்து கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு தொடங்கி எழுபத்தெட்டு நாட்கள் கடுமையான நோன்பு மேற்கொண்டு தவம் செய்யுங்கள்.

    பிரமன் கூறியபடி திங்கட்கிழமையன்று காவிரியில் நீராடிப் பிராணநாதரை வழிபட்டு எருக்கிலைகளில் தயிரன்னம் வைத்துப் புசியுங்கள்.

    தவமிருக்கும்போது மனங்களை ஒருநிலைப்படுத்திப் பிராண நாதரைத் தியானம் பண்ணுங்கள்.

    இந்த அர்க்கவனத்தில் உள்ள ஒன்பது தீர்த்தங்களையும், ஒவ்வொருவரும் ஒரு தீர்த்தமாகத் தேர்ந்து கொண்டு நாள்தோறும் அதில் நீராடுவீராக" என்று அகத்தியர் விவரம் கூறினார்.

    • படைப்புத் தொழிலின் முதல்வரே! எங்களை மன்னிக்க வேண்டும்.
    • மற்ற நாட்களில் உணவின்றி நோன்பு இருக்க வேண்டும்.

    சாபமொழி கேட்ட நவக்கிரகங்கள் இடி ஒலி கேட்ட பாம்பு போல உடல் பதைத்து, உள்ளம் நைந்து வருந்தி, பிரம தேவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர்.

    "படைப்புத் தொழிலின் முதல்வரே! எங்களை மன்னிக்க வேண்டும்.

    காலவ முனிவரின் தவத்தின் சுவாலை எம்முடைய மண்டலங்களை அடைந்து சுட்டெரிக்கத் தொடங்கியது.

    அதனால் அவர் முன் சென்று அவர் கேட்ட வரத்தைத் தந்து விட்டோம்.

    அறியாமல் செய்த பிழையைப் பொறுத்து, தங்களின் சாபத்துக்கு விமோசனம் கூற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர்.

    அதுகேட்டு மனம் இரங்கிய பிரமதேவர், "நவக்கிரக நாயகர்களே! நீங்கள் நம்முடைய கட்டளையை மீறி நடந்தமையால், அந்தச் சாபம் பெற்றீர்கள்.

    ஆயினும் சாபவிமோசனம் கேட்டு நிற்பதால் ஒரு வழி கூறுகிறோம்.

    நீங்கள் பூலோகத்திற்குச் சென்று புண்ணிய பூமியான பரத கண்டத்தை அடைந்து, தென் பாரதமான தமிழ்நாட்டு காவிரியாற்றின் வடகரையை அணுகுங்கள்.

    அங்கே அர்க்காவனம் என்ற வெள்ளெருக்கங்காடு ஒன்று உள்ளது. அங்கே தங்கியிருந்து தவம் புரியுங்கள்.

    கார்த்திகை மாதத்து முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிப் பன்னிரண்டு ஞாயிற்றுக்கிழமை முடிய எழுபத்தெட்டு நாட்கள் தவம் புரிய வேண்டும்.

    திங்கட்கிழமை தோறும் உதயத்துக்கு முன்னராகக் காவிரியில் நீராடிப் பிராணநாதரையும், மங்கல நாயகியையும் வழிபட வேண்டும்.

    உதயாதி ஏழு நாழிகைக்குள் அர்க்க இலை (வெள்ளெருக்கு இலை)யில் ஒரு பிடி அளவு தயிர் அன்னம் வைத்து அதைப் புசிக்க வேண்டும்.

    மற்ற நாட்களில் உணவின்றி நோன்பு இருக்க வேண்டும்.

    இவ்வரிசி நோன்பைச் சிறிதளவு தவறும் நேராமல் செய்து வந்தால் சாப விமோசனம் கிடைக்கும்" என்று பிரமதேவர் சொன்னார்.

    • அதனால் பிரமதேவர் சினம் கொண்டார். நவக்கிரகங்களைத் தம்மிடம் வருமாறு செய்தார்.
    • தனித்து இயங்கும் சுதந்திரம் உங்களுக்கு இல்லை.

    இந்தச் செய்தி பிரமதேவருக்குத் தெரிய வந்தது.

    அதனால் பிரமதேவர் சினம் கொண்டார். நவக்கிரகங்களைத் தம்மிடம் வருமாறு செய்தார்.

    அவர்களை நோக்கி, "நவக்கிரகங்களே! நீங்கள் தேவர்களாக இருந்தாலும், எம் கட்டளைப்படி நடக்க வேண்டியவர்களாவீர்கள்.

    தனித்து இயங்கும் சுதந்திரம் உங்களுக்கு இல்லை.

    சிவபெருமானின் ஆணைப்படியும், காலதேவனின் ஆணை கொண்டும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அவரவரது வினைப் பயன்களையூட்டுவதற்காகவே உங்களை யாம் படைத்தோம்.

    அவ்வாறு செயல்படவே உங்களுக்கு உத்தரவிட்டோம்.

    ஆனால் நீங்கள் எமது உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் மீறி நடக்கத் தொடங்கனீர்கள்.

    நீங்கள் சுதந்திரமானவர்களாகிக் காலவமுனிவருக்குத் தொழுநோய் அணுகாமல் இருக்க வரம் கொடுத்துள்ளீர்கள்.

    ஆகவே நீங்கள் ஒன்பது பேரும் பூலோகத்தில் பிறந்து, காலவ முனிவர் தொழுநோயால் துன்பப்பட வேண்டிய கால அளவுவரை நீங்கள் அந்தத் தொழுநோயால் துயர் அடைவீராக" என்று சாபமிட்டார்.

    • அதன் நடுவில் நின்று நவக்கிரகங்களைத் தியானித்துக் கடுந்தவம் புரிந்தார்.
    • தம்மை நோக்கித் தவம்புரியும் காலவமுனிவரின் முன் நவநாயகர்கள் ஒரு சேர வந்து காட்சி கொடுத்தார்கள்.

    காலவ முனிவருக்கு இமயமலைச் சாரலில் இருக்க மனம் கொள்ளவில்லை.

    அதனால் விந்தியமலைச் சாரலுக்கு வந்தார்.

    ஒரு நல்ல நாள் பார்த்துப் பஞ்சாக்கினி (நான்கு திசைகளிலும் மூட்டம் நான்கு அக்கினியும் மேலே காய்கின்ற சூரியனும் ஆகிய ஐவர் அக்கினியே பஞ்சாக்னி) வளர்த்தார்.

    அதன் நடுவில் நின்று நவக்கிரகங்களைத் தியானித்துக் கடுந்தவம் புரிந்தார்.

    தவம் முதிரத் தவத்தின் அக்கினிச் சுவாலை நவக்கிரக மண்டலங்களைத் தாவியது.

    சுவாலையின் வெம்மையை நவக்கிரகங்கள் உணர்ந்தனர்.

    தம்மை நோக்கித் தவம்புரியும் காலவமுனிவரின் முன் நவநாயகர்கள் ஒரு சேர வந்து காட்சி கொடுத்தார்கள்.

    காலவ முனிவர் அக்கினியிலிருந்து வெளியே வந்து நவநாயகர்களின் முன்னே விழுந்து வணங்கினார்.

    எழுந்து நின்று கண்களில் ஆனந்தநீர் வழியக் கைகளைத் தலைமேல் கூப்பி நின்று தோத்திரம் சொல்லித் துதித்தார்.

    காலவ முனிவரின் பரவச நிலையைக் கண்டு மகிழ்ந்த நவக்கிரக நாயகர்கள், "முனிவரே உமது தவத்திற்கு மகிழ்ந்தோம்.

    உமக்கு என்ன வரம் வேண்டும்" என வினவினர்.

    காலவ முனிவர் நவநாயகர்களை நோக்கி, "நவமண்டல அதிபர்களே! வினைப் பயன்களையூட்டும் தேவர்களே! அடியேனை தொழுநோய் பற்றும் நிலை உள்ளது.

    அந்தத் தொழுநோய் என்னை அணுகாதபடி வரம் தர வேண்டும்" என்று விண்ணப்பித்து கொண்டார்.

    நவநாயகர்களும் "அவ்வண்ணமே ஆகுக" என்று வரம் தந்து மறைந்தனர்.

    • காலவ முனிவர் சிந்திக்கத் தொடங்கினார். தன்னுடைய வருங்காலத்தை எண்ணிப் பார்த்தார்.
    • காலவ முனிவர் தமது வருங்கால நிலையை எடுத்துரைத்தார்.

    காலவ முனிவர் சிந்திக்கத் தொடங்கினார். தன்னுடைய வருங்காலத்தை எண்ணிப் பார்த்தார்.

    தன்னுடைய முன்வினைப் பயனால் கூடிய விரைவில் தமக்குத் தொழுநோய் வரும் என்பதை உணர்ந்தார்.

    மிகவும் மனம் நொந்து முகம் புலர்ந்து வாட்டமுற்றார்.

    காலவ முனிவரின் சோகம் படிந்த முகத்தை பார்த்த மற்ற முனிவர்கள், "சோகத்துக்குக் காரணம் என்ன" என்று கேட்டனர்.

    காலவ முனிவர் தமது வருங்கால நிலையை எடுத்துரைத்தார். அதனைக் கேட்ட மற்ற முனிவர்கள், "காலவரே! முக்காலம் உணர்ந்த மூதறிஞரே! வருவன வந்தே தீரும்.

    அதனைத் தீர்க்க வழி நாடாமல் வருந்தலாமா? முன்வினைப் பயனை ஊட்டுகிறவர்கள் நவக்கிரகங்கள்.

    அவர்களை நோக்கித் தவம் செய்து வினைப் பயனிலிருந்து விடுதலை பெற முயற்சி செய்யுங்கள்" என்று ஆறுதல் கூறினர்.

    ×