ஆன்மிகம்

5 வகையான நந்திகள்

Published On 2017-10-06 07:50 GMT   |   Update On 2017-10-06 07:50 GMT
பெரிய சிவாலயங்களில் 5 வகையான நந்திகள் அமைந்திருக்கும். இந்த நந்திகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பெரிய சிவாலயங்களில் 5 வகையான நந்திகள் அமைந்திருக்கும்.

இந்திர நந்தி.
வேத நந்தி.
ஆத்ம நந்தி
மால்விடை நந்தி.
தரும நந்தி.

ஆகியவைதான் அவை .

இவைகளில், இந்திர நந்தியை கோவிலுக்கு வெளியே சற்றுத் தொலைவில் கருவறையை நோக்கி அமைக்கின்றனர்.

வேத நந்தி அல்லது பிரதம நந்தியை சுதையாலும், சுண்ணாம்பாலும் மிகப் பெரிய அளவில் பெரிய மண்டபத்தினுள் அமைக்கின்றனர்.

ஆத்ம நந்தி கொடி மரத்தின் அடியில் அமைகிறது. இதற்கே, பிரதோஷ கால சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

மால்விடை நந்தி சக்தி பதமான இரண்டாவது ஆவரணுத்துள் அமைகிறது.

தரும நந்தி இறைவனுக்கு அருகில் மகா மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும்.
Tags:    

Similar News