ஆன்மிகம்

திருப்பதியில் ஆண்டுதோறும் புரட்டாசியில் பிரம்மோற்சவம் நடத்த காரணம்

Published On 2017-10-02 08:48 GMT   |   Update On 2017-10-02 08:48 GMT
திருப்பதியில் ஆண்டுதோறும் புரட்டாசியில் பிரம்மோற்சவ நாட்களில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் எழுந்தருளி வீதி உலா வருவார். இதற்கான காரணத்தை அறியலாம்.
திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவம் மற்றும் இதர விழா நாட்களில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் எழுந்தருளி வீதி உலா வருவார் அவரை மலையப்பன் என்று அழைப்பர்.

துணைவியருடன் பவனி வரும் அவர்ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது தான் இல்லறம். மனைவியைப் பிரிந்து விட்டால் ஒருவனுக்கு மதிப்பு இல்லை என்று பக்தர்களுக்கு ஒரு செய்தி சொல்கிறார்.

திருமால் மீது சில காரணங்களால் வருத்தம் கொண்ட லட்சுமி, பூலோகம் வந்தாள். ஆகாசராஜன் என்பவனின் மகளாகப் பிறந்தாள். பத்மாவதி என்ற பெயர் கொண்டாள்.

லட்சுமியை பிரிந்ததால் திருமால் செல்வ மெல்லாம் இழந்தார். அவளைத்தேடி சீனிவாசன் என்ற பெயருடன் பூலோகம் வந்தார். மிகுந்த சிரமத்தின் பேரில் பத்மாவதியை மணந்தார்.

அதன்பின் அவருக்கு எல்லா வளங்களும் வந்து சேர்ந்தன. மனைவியால் தான், ஒரு கணவனுக்கு மதிப்பு என்பதை இந்த சம்பவத்தின் மூலம் உலகுக்கு ஏழுமலையான் உணர்த்தினார். அதை பக்தர்களுக்கு நினைவுபடுத்தவே திருப்பதியில் ஆண்டுதோறும் புரட்டாசியில் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.
Tags:    

Similar News