ஆன்மிகம்

வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் விநாயகர்கள்

Published On 2017-08-27 05:52 GMT   |   Update On 2017-08-27 05:52 GMT
ஒவ்வொரு இடத்திலும் எழுந்தரும் விநாயகர்கள் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகிறார்கள். எந்த ஊரில் என்ன பெயரில் அழைக்கப்படுகிறார் என்று பார்க்கலாம்.
* அவிநாசி பழைய பஸ் நிலையத்திற்கு அருகே வீற்றிருக்கும் விநாயகரை ‘கல்வி கணபதி’ என்று அழைக்கிறார்கள். இந்த விநாயகரின் முன்பு சதுர்த்தி அன்று, பாட புத்தகங்களை அடுக்கி வைத்து வேண்டிக்கொண்டு மாணவர்கள், கல்வியில் சிறந்த முறையில் தேர்ச்சி பெறுவதாக நம்பப்படுகிறது. குழந்தைகள் ஞாபக சக்தி பெருகவும் இந்த விநாயகரை தரிசிப்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.



* நாமக்கல் கோட்டை பகுதியில் எழுந்தருளியிருக்கிறார் அரசமரத்தடி பிள்ளையார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்லும் வழியில் இந்த விநாயகர் கோவில் கொண்டுள்ளார். இவரை வணங்கினால் தடைகள் அகலும்.

* சின்னக் காஞ்சியில் வரதராஜப் பெருமாள் கோவிலின் கீழ் பிரகாரத்தில் மேடை மீதுள்ள அறையில் ஒரு விநாயகர் வீற்றிருக்கிறார். இவரது உடல் முழுவதும் விபூதி நிறைந்திருக்கும். இவரை ‘விபூதி விநாயகர்’ என்று அழைக்கிறார்கள்.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் சன்னிதியில், கோபுர வாசலுக்கு மேல் இடது பக்கமாக வலம்புரி விநாயகர் விற்றிருந்து அருள்கிறார். இவரது திருமேனியில் வெண்ணெய் சாத்தப்படுகிறது.

* புனேயில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மோர்கான் என்னும் கிராமம். இங்கு மயூரேஷ்வர் என்ற பெயரில் விநாயகர் அருள்பாலிக்கிறார். ஆதிசங்கரர் பூஜித்த இந்த விநாயகருக்கு, வைரத்தில் கண்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த விநாயகருக்கு குங்குமத்தால் இடைவிடாமல் அர்ச்சனை செய்யப்படுகிறது.

* நாகர்கோவிலின் ஒரு பகுதியான வடசேரியில் ‘கருத்து விநாயகர்’ கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள், இத்தல விநாயகரின் முன்பாக எலுமிச்சைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து, தாங்கள் செய்ய நினைக்கும் காரியங்களுக்கு கருத்து கேட்கின்றனர். குறிப்பால் கருத்தினை அறிந்து, அதை செயல்படுத்தி நன்மை வழங்குவாராம் இந்த விநாயகர்.
Tags:    

Similar News