ஆன்மிகம்

பானை உடைத்தல் - ஸ்ரீமத் பாகவத புராணம் கூறும் விளக்கம்

Published On 2017-08-12 09:01 GMT   |   Update On 2017-08-12 09:01 GMT
ஞானத்தை அடையும்போது மாயை என்ற மண் பாண்டம் உடைகிறது; அந்த ஜீவாத்மா, பரமாத்மாவோடு உடனடியாக இரண்டறக் கலந்துவிடுகிறது. இதுவே ‘ஜீவன் முக்தி’ நிலை என்கின்றனர்.
“கிருஷ்ண பரமாத்மா, கோபியர் சுமந்து செல்லும் பால், தயிர் மண் குடங்களை விளையாட்டாக உடைப்பான்’ என்று ஸ்ரீமத் பாகவத புராணம் கூறுகின்றது.

அத்வைத தத்துவத்தை விளக்கியுள்ள ஸ்ரீசங்கரர் போன்ற பெரியோர்கள், ‘குடத்துக்குள் உள்ள வெற்றிடத்துக்கு ஆகாயம்’ என்று பெயர். அதற்குப்புறத்திலும் வெற்றிடமே உள்ளது. குடம் உடைபடும் போது அதற்குள்ளிருந்த ‘ஆகாயம்’ எங்கும் பயணிக்க வேண்டிய அவசியமில்லாமல், இயல்பாகவே புறத்தில் உள்ள ஆகாயத்தில் கலக்கின்றது.

அதுபோல் ஜீவாத்மா, மாயை என்ற மண் பாண்டத்துள் கிடக்கின்றது. அது ஞானத்தை அடையும்போது மாயை என்ற மண் பாண்டம் உடைகிறது; அந்த ஜீவாத்மா, பரமாத்மாவோடு உடனடியாக இரண்டறக் கலந்துவிடுகிறது. இதுவே ‘ஜீவன் முக்தி’ நிலை என்கின்றனர்.

ஆனால் மாயையைக் கடப்பது அரிதினும் அரிதான செயலாயிற்றே! அதற்கு இறைவனின் திருவருட் பார்வை, அந்த ஜீவாத்மாவின் மேல் விழ வேண்டும்.

ஆனால் கிருஷ்ணனோ, “என் கண்ணாடிகூட வேண்டாம்; கல்லடியே மாயையை உடைத்தெறியப் போதுமானது’ என்று விளையாட்டாகச் சொல்வதுபோல் கோபியர் சுமந்த பால், தயிர் குடங்களை உடைத்து, உலகத்துக்கு தத்துவ உபதேசம் உரைத்தான்.
Tags:    

Similar News