ஆன்மிகம்

இன்று கருட பஞ்சமி: கருட தரிசன பலன்கள்

Published On 2017-07-28 09:06 GMT   |   Update On 2017-07-28 09:06 GMT
இன்று (வெள்ளிக்கிழமை) கருட பஞ்சமி நாளாகும். கிழமைகளில் கருட தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதத்தில் வரும் பஞ்சமி திதி, ‘கருட பஞ்சமி’யாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) கருட பஞ்சமி நாளாகும். கருடனை தரிசிப்பதில் உள்ள பொதுவான பலனை இங்கு பார்க்கலாம்.

அதிகாலையில் அருணோதய நேரத்தில் கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். வியாழன் பஞ்சமியில் சுவாதி நட்சத்திரத்தில் கருட பஞ்சாங்கத்தை படிப்பது அமோக பலனை தரும். சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் விசேஷம். கிழமைகளில் கருட தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:-

ஞாயிறு : பிணி விலகும்.

திங்கள் : குடும்ப நலம் பெருகும்.

செவ்வாய் : துணிவு பிறக்கும்.

புதன் : பகைவர் தொல்லை நீங்கும்.

வியாழன் : நீண்ட ஆயுள்.

வெள்ளி : திருமகள் திருவருள் கிட்டும்.

சனி : முக்தி அடையலாம்.

தேவலோகத்தில் இருந்து கருடன் எடுத்து வந்த அமுத கும்பத்தில் ஒட்டிய தேவப்புல்லே பூவுலகில் விழுந்து தர்பை ஆயிற்று.
Tags:    

Similar News