ஆன்மிகம்

வீணையுடன் காட்சி தரும் கடவுள்கள்

Published On 2017-07-03 08:20 GMT   |   Update On 2017-07-03 08:20 GMT
வீணையில் 32 வகையான வீணைகள் இருக்கின்றன என்றும், இதில் 31 வகையான வீணையினைக் கடவுளாக இருப்பவர்கள் இசைப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.
வீணை என்று சொன்னதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் கல்விக்கடவுளான சரஸ்வதிதான். இவர் கச்சபி எனும் வகையைச் சேர்ந்த வீணையைக் கொண்டு இசைக்கிறார். ஆனால், வீணையில் 32 வகையான வீணைகள் இருக்கின்றன என்றும், இதில் 31 வகையான வீணையினைக் கடவுளாக இருப்பவர்கள் இசைப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.

1. பிரம்மதேவனின் வீணை - அண்டம்

2. விஷ்ணு - பிண்டகம்

3. ருத்திரர் - சராசுரம்

4. கவுரி - ருத்ரிகை

5. காளி - காந்தாரி

6. லட்சுமி - சாரங்கி

7. சரஸ்வதி - கச்சபி எனும் களாவதி

8. இந்திரன் - சித்தரம்

9. குபேரன் - அதிசித்திரம்

10. வருணன் - கின்னரி



11. வாயு - திக்குச்சிகை யாழ்

12. அக்னி - கோழாவளி

13. நமன் - அஸ்த கூர்மம்

14. நிருதி - வராளி யாழ்

15. ஆதிசேடன் - விபஞ்சகம்

16. சந்திரன் - சரவீணை

17. சூரியன் - நாவீதம்

18. வியாழன் - வல்லகி யாழ்

19. சுக்ரன் - வாதினி

20. நாரதர் - மகதி யாழ்

21. தும்புரு - களாவதி (மகதி)

22. விசுவாவசு - பிரகரதி

23. புதன் - வித்யாவதி

24. ரம்பை - ஏக வீணை

25. திலோத்தமை - நாராயணி

26. மேனகை - வாணி

27. ஊர்வசி - லகுவாட்சி

28. ஜயந்தன் - சதுசும்

29. ஆஹா, ஊஹூ தேவர்கள் - நிர்மதி

30. சித்திரசேனன் - தர்மவதி (கச்சளா)

31. அனுமன் - அனுமதம்

32. ராவணன் - ராவணாசுரம்
Tags:    

Similar News