ஆன்மிகம்
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவில் கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.

திண்டுக்கல் சீனிவாசப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

Published On 2017-06-23 03:55 GMT   |   Update On 2017-06-23 03:55 GMT
திண்டுக்கல் மலையடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீனிவாசப்பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதையொட்டி கொடியேற்றம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாசப்பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றதாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் வருடந்தோறும் பிரம்மோற்சவ விழா சிறப்புடன் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த வருட பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் தொடங்கி, மாலையில் வாஸ்துசாந்தி செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து நேற்று கொடியேற்றம் நடந்தது.

இதையொட்டி காலை 6 மணியளவில் சுவாமிக்கு, பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான சிறப்பு திருமஞ்சனம், ராஜ அலங்காரம் நடந்தது. அதன்பிறகு விஸ்வக்சேனர் பூஜை, வருண கலச பூஜை, பாராயணம் நடந்தது. அதனை தொ“டர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. இதனை கோவில் அர்ச்சகர் பாலாஜி தலைமையில் குருக்கள் ஏற்றினர். இரவு 7 மணியளவில் அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி நகர்வலம் வந்து கோவிலை அடைந்தது.

விழாவில், வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) மாலையில் சுவாமிக்கு திருக்கல்யாணமும், முத்துப்பல்லக்கில் வீதிஉலாவும் நடக்கிறது. 30-ந் தேதி மாலையில் திருத்தேர் புறப்பாடு நடக்கிறது. அதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி தெப்ப உற்சவம், 3-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று திருவிழா நிறைவடைகிறது. விழாவில், நாள்தோறும் காலையில் சுவாமி புறப்பாடாகி மண்டகப்படிதாரர் இடத்தை அடைகிறது. மாலையில் வெவ்வேறு வாகனங்களில் புறப்பட்டு நகர்வலம் வந்து கோவிலை அடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வேல்முருகன், மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News