ஆன்மிகம்
திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை படத்தில் காணலாம்.

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2017-06-15 05:12 GMT   |   Update On 2017-06-15 05:12 GMT
மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் அமைந்துள்ளது பாலாம்பிகா உடனுறை மாற்றுரைவரதீஸ்வரர் கோவில். இங்கு எழுந்தருளி உள்ள இறைவன் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மாற்றுரைத்து பொற்கிழி அளித்தமையால் மாற்றுரைவரதர் என்ற திருப்பெயர் கொண்டு விளங்குகிறார்.

திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி. காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலதோஷத்தை நீக்கி நலம்பெற வைக்கும் தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவில் கி.பி.9-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களாலும் தொடர்ந்து பாண்டிய போசள மன்னராலும் திருப்பணிகள் செய்யப்பட்டது. தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தற்போது திருப்பணிகள் நடந்து முடிந்ததையடுத்து கும்பாபிஷேகம் நடந்தது.

கடந்த 8-ந் தேதி விநாயகர் வழிபாடு, தனபூஜை, கோபூஜை ஆகியவற்றுடன் தொடங்கி ஆறு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 6 மணியளவில் கடம் புறப்பாடும் 7.15 மணியளவில் சிவாச்சாரியார்கள் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்ற மகாகும்பாபிஷேகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையரும், கோவில் அலுவலருமான ரவிச்சந்திரன், தக்கார் ஜெய்கிஷன் ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News