ஆன்மிகம்
காக்காயந்தோப்பு முத்துமாரியம்மன் கோவிலில் ஒரு பக்தர் பாடை செடலில் கோவிலை சுற்றிவந்தபோது எடுத்த படம்.

முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

Published On 2017-05-27 03:55 GMT   |   Update On 2017-05-27 03:55 GMT
அரியாங்குப்பம் அடுத்த காக்காயந்தோப்பில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அரியாங்குப்பம் அடுத்த காக்காயந்தோப்பில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் செடல் உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 73-வது ஆண்டாக இந்த ஆண்டு செடல் உற்சவம் கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடந்து வருகிறது. விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மேளதாளம் முழங்க அம்மன் உற்சவ சிலை தேரில் எழுந்தருளியது. இதனை தொடர்ந்து தேரை ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மாலை 5 மணியளவில் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு செடல் அணிந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். உடல் நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், பாடை செடலில் கோவிலை 3 முறை சுற்றிவந்தனர். இரவு அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

விழாவில் இன்று (சனிக் கிழமை) காலை 8 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவமும், இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News