ஆன்மிகம்
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொள்ள வீதி உலாவாக வந்தபோது எடுத்த படம்.

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றம் நடக்கிறது

Published On 2017-04-29 04:24 GMT   |   Update On 2017-04-29 04:25 GMT
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா செல்லியம்மன் உற்சவத்துடன் நேற்று தொடங்கியது. அதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றம் நடக்கிறது.
வேலூர் கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கி, அடுத்த மாதம் (மே) 12-ந்தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு கிராம தேவதை செல்லியம்மன் உற்சவம் நடந்தது.

இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு விநாயகர் உற்சவம், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணியில் இருந்து 9 மணிக்குள் ரிஷப லக்னத்தில் கொடியேற்றம், அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, அன்னவாகன வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

மே 1-ந்தேதி காலை 9 மணிக்கு விநாயகர், சந்திரசேகரர் புறப்பாடு, மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, மகா அதிகார நந்தி வாகன வீதிஉலா, 2-ந்தேதி காலை 8.30 மணிக்கு விநாயகர், சந்திரசேகரர் புறப்பாடு, மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, மகா பூத வாகன வீதிஉலா, 3-ந்தேதி காலை 9 மணிக்கு விநாயகர், சந்திரசேகரர் புறப்பாடு, மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, மகா நாக வாகன வீதிஉலா.

4-ந்தேதி காலை 8.30 மணிக்கு விநாயகர், சந்திரசேகரர் புறப்பாடு, மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 7.30 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, மகா ரிஷப வாகன வீதி உலா, 5-ந்தேதி காலை 8.30 மணிக்கு விநாயகர், சந்திரசேகரர் புறப்பாடு, மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, மகா யானை வாகன வீதிஉலா, 63 நாயன்மார்கள் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

6-ந்தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் காலை 7.30 மணியில் இருந்து 9 மணி வரை நடக்கிறது. 7-ந்தேதி காலை 8.30 மணிக்கு விநாயகர், சந்திரசேகரர் புறப்பாடு மற்றும் பிச்சாண்டவர் உற்சவம், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, மகா குதிரை வாகன வீதிஉலா, 8-ந்தேதி காலை 9 மணிக்கு விநாயகர், மாலை 6 மணிக்கு சந்திரசேகரர் புறப்பாடு, பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, புருஷா மிருக வாகன வீதி உலா.

9-ந்தேதி காலை 8.30 மணிக்கு நடராஜருக்கு அபிஷேகம், தீர்த்தவாரி, மாலை 4.30 மணிக்கு கொடியிறக்கம், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, ராவணேஸ்வரர் வாகன வீதிஉலா, 10-ந்தேதி காலை 9 மணிக்கு பஞ்சப்ராகார உற்சவம் கோட்டையை சுற்றி சாமி வலம் வருதல், இரவு 8.30 மணிக்கு சண்டிகேஸ்வரர் உற்சவம், ஜலகண்டேஸ்வரர் புஷ்ப பல்லக்கு, 11-ந்தேதி மாலை 6 மணிக்கு விடையாற்றி உற்சவம், 12-ந்தேதி மாலை 6 மணிக்கு உற்சவ சாந்தி அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனத்தினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News