ஆன்மிகம்

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் அன்னமலை தரிசனம்

Published On 2017-04-28 05:32 GMT   |   Update On 2017-04-28 05:32 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் அன்னமலை தரிசனம் நடந்தது. இதில் பக்தர்களுக்கு பெட்டிச்சோறு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசை தினத்துக்கு மறுநாள் குருபூஜை நடைபெறும். இந்த ஆண்டு அமாவாசை தினமான நேற்று முன்தினம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து காணிக்கை பொருட்களை வழங்கினர்.

அவற்றை சேர்மன் அருணாசலசாமியின் 109-வது குருபூஜை தினமான நேற்று அதிகாலையில் சமைத்தனர். காலை 10.30 மணிக்கு அன்னமலை சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னமலை சிறப்பு தரிசனம் நடந்தது.

பின்னர் கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பல ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்களுக்கு பெட்டிச்சோறும் வழங்கப்பட்டது.

Similar News