ஆன்மிகம்
விஸ்வநாதர் கோவிலில் ருத்ராட்ச கவசம் மீது பாம்பு சட்டை கிடந்ததை படத்தில் காணலாம்.

விஸ்வநாதர் கோவிலில் ருத்ராட்ச கவசத்தின் மீது கிடந்த பாம்பு சட்டை

Published On 2017-04-21 06:43 GMT   |   Update On 2017-04-21 06:44 GMT
தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதர் கோவிலில் ருத்ராட்ச கவசத்தின் மீது பாம்பு சட்டை கிடந்தது. இதை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் வழிபடுவோருக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். இங்கு விஸ்வநாதருக்கு ருத்ராட்சத்தால் மட்டுமே அர்ச்சனை நடைபெறுவது வழக்கம். இக்கோவிலில் பிரதோஷ நாளில் விஸ்வநாதருக்கு சாத்தப்படும் ருத்ராட்ச கவசம் தனி சன்னதியில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று சாமிக்கு தீபாராதனை காட்டிவிட்டு ருத்ராட்ச கவசத்துக்கு தீபாராதனை காட்ட சென்ற கோவில் அர்ச்சகர் பிரகாஷ் வெளியே ஓடி வந்து, பாம்பு, பாம்பு என கூச்சல் போட்டார்.

இதையடுத்து பக்தர்கள் அங்கு சென்று சன்னதியில் விளக்கை போட்டு பார்த்தனர். இதில் ருத்ராட்ச கவசத்தின் மீது பாம்பு சட்டை கிடந்தது தெரியவந்தது. இதை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பாம்பு சட்டை 6 அடி நீளம் இருந்தது. இதுபற்றிய தகவல் பரவியதால் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு கூட்டம், கூட்டமாக வந்து ருத்ராட்ச கவச சன்னதியில் தரிசனம் செய்தனர். இதே கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூரியகிரகணத்தன்று பாம்பு வில்வ இலைகளால் சாமிக்கு அர்ச்சனை செய்தது குறிப்பிடத்தக்கது.

Similar News