ஆன்மிகம்
பூச்சாட்டுதல் கோலத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதை படத்தில் காணலாம்.

எல்லைப்பிடாரியம்மன் கோவில் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

Published On 2017-03-29 08:31 GMT   |   Update On 2017-03-29 08:31 GMT
சேலத்தில் பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் விழா பூச்சாட்டுதலுடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் குமாரசாமிப்பட்டியில் பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.

இதையடுத்து, பக்தர்கள் அம்மனுக்கு கூடைகளில் பூக்களை கொண்டு வந்து கொட்டினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. திருவிழாவில் தொடர்ந்து வருகிற 4-ந் தேதி இரவு 7 மணிக்கு சுப்ரமணிய சாமி ஆலயத்தில் இருந்து எல்லைப்பிடாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுடன் கோவிலுக்கு கொண்டு வருதல், 8 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம், சக்தி அழைப்பு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

5-ந் தேதி காலை 6 மணிக்கு சக்தி பூங்கரகத்துடன் அம்மன் ஊர்வலம், 6.30 மணிக்கு அலகு குத்துதல் நிகழ்ச்சியும், 12 மணிக்கு பொங்கல் வைபவமும், 6-ந் தேதி மாலை 4 மணிக்கு பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 7-ந் தேதி காலை 6.30 மணிக்கு பால்குட ஊர்வலம், 7 மணிக்கு அம்மனுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம், மாலை 4.30 மணிக்கு வண்டிவேடிக்கை நிகழ்ச்சியும், 8-ந் தேதி இரவு சத்தாபரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Similar News