ஆன்மிகம்

திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்துக்கு 7 மணிநேரம் ஆனது

Published On 2017-03-28 06:24 GMT   |   Update On 2017-03-28 06:24 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று இலவச தரிசனத்துக்கு 7 மணிநேரமும், திவ்ய தரிசனத்துக்கு 4 மணிநேரமும், பிரத்யேக பிரவேச தரிசனத்துக்கு 3½ மணிநேரமும் ஆனது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக மொத்தம் 14 ஆயிரம் திவ்ய தரிசன பக்தர்கள் நடந்து வந்தனர். காலை 9 மணியில் இருந்து இரவு 7 மணிவரை 45 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இலவச தரிசனத்துக்கு 7 மணிநேரமும், திவ்ய தரிசனத்துக்கு 4 மணிநேரமும், பிரத்யேக பிரவேச தரிசனத்துக்கு 3½ மணிநேரமும் ஆனது. ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.5 கோடி கிடைத்தது. புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்ததிலிருந்து, முதல் முறையாக ரூ.5 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது இதுவே முதல் முறையாகும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News