ஆன்மிகம்
விழாவில் பக்தர் ஒருவர் குண்டம் இறங்கிய போது எடுத்த படம்.

தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

Published On 2017-02-27 06:16 GMT   |   Update On 2017-02-27 06:16 GMT
கோவை கெம்பட்டி காலனி தர்மராஜா கோவில் வீதியில் உள்ள தர்மராஜா திரவுபதியம்மன் மற்றும் ஸ்ரீ குண்டத்து பத்திரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நேற்று நடந்தது.
கோவை கெம்பட்டி காலனி தர்மராஜா கோவில் வீதியில் உள்ள தர்மராஜா திரவுபதியம்மன் மற்றும் ஸ்ரீ குண்டத்து பத்திரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 60 அடி நீளத்துக்கு குண்டம் வளர்க்கப்பட்டிருந்தது. உக்கடம் விநாயகர் கோவிலில் இருந்து அன்னபட்சி வாகனத்தில் திரவுபதியம்மன் எழுந்தருள செய்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

அதை தொடர்ந்து குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் இறங்கினார்கள். அதன்பின்னர் இரவு 9 மணியளவில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மற்றும் சண்முகவர்மா, சி.எம்.அண்ணாதுரை, குமரேஷ் என்கிற ராஜவர்மா, கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News