ஆன்மிகம்

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் பதியில் அவதார தினவிழா மார்ச் 3, 4-ந் தேதிகளில் நடக்கிறது

Published On 2017-02-16 08:32 GMT   |   Update On 2017-02-16 08:33 GMT
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யாவின் 185 வது அவதார தினவிழா வருகிற மார்ச் 3, 4ந்தேதிகளில் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யாவின் 185 வது அவதார தினவிழா வருகிற மார்ச் 3, 4ந்தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி 3ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பணிவிடை , உகப்படிப்பு நடக்கிறது.

காலை 6 மணிக்கு அன்னதானம், மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு பணிவிடை, மாலை 5.30 மணிக்கு அய்யா பூ வாகனத்தில் பவனி நடக்கின்றன. மாலை 6 மணிக்கு அகிலத்திரட்டு வாழ்வியல் கருத்துரை நடக்கிறது. இரவு 9 மணிக்கு சாமிதோப்பு சிவச்சந்திரன் குழுவினரின் அருளிசை வழிபாடு நடக்கிறது. இரவு 12 மணிக்கு செந்தில்குமார் குழுவினரின் அருளிசை வழிபாடு நடைபெறுகிறது. மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து அதிகாலை 6.27 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிடுதலும், பணிவிடையும் நடைபெறுகிறது.

பின்னர் அன்னதர்மம், இனிமம் வழங்குதல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் சுந்தரபாண்டி, செயலாளர் தர்மர், கவுரவ தலைவர் நடேசநாடார், பொருளாளர் ராமையா, துணைத்தலைவர் தங்கையா, துணை செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Similar News