ஆன்மிகம்

வேலூர் கஸ்பா சாஸ்திரிநகர் ஐயப்பன் கோவிலில் மகரஜோதி பெருவிழா

Published On 2017-01-16 04:08 GMT   |   Update On 2017-01-16 04:08 GMT
வேலூர் கஸ்பா சாஸ்திரிநகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் மகரஜோதி பெருவிழா நடந்தது. அதையொட்டி ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
வேலூர் கஸ்பா சாஸ்திரிநகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் மகரஜோதி பெருவிழா நடந்தது. அதையொட்டி ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக காலையில் காவல் தெய்வம் கருப்பணசாமிக்கு சிறப்புப்பூஜைகள், கணபதி ஹோமம், மகாஅபிஷேகம், ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து உச்சிக்கால பூஜை முடிந்ததும் நடைசாத்தப்பட்டது.

பின்னர் நடை திறந்ததும், நிறுவனர் ஜெ.தென்னரசு வீட்டில் இருந்து திருஆபரணப்பெட்டி, மங்கள வாத்தியம் மற்றும் மேள தாளங்கள் முழங்க சாமி வீதிஉலா, மாலை மகா அபிஷேகம், ஆபரணம் அணிவித்தல், மகா ஆராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

கோவிலில் மகரஜோதி வடிவாக பக்தர்களுக்கு ஐயப்பன் அருள்பாலித்தார். மேலும் இருமுடி கட்டி சபரிமலைக்குச் செல்ல இயலாத பக்தர்கள் இங்கேயே பதினெட்டு படிகள் ஏறி, இருமுடி செலுத்தி நெய் அபிஷேகம் செய்து ஐயப்பனை வழிபட்டனர். மகரஜோதி பெரு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News