ஆன்மிகம்

ஐயப்ப பக்தர்கள் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்

Published On 2016-12-02 10:18 GMT   |   Update On 2016-12-02 10:18 GMT
சபரிமலைக்கு விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்கள் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் என்னவென்று கீழே விரிவாக பார்க்கலாம்.
1. மாலை அணிந்து கொள்ளும் பக்தர் மிக முக்கியமாக பிரம்மச்சரிய விரதம் இருக்க வேண்டும்

2. காலை - மாலை இரு வேளைகளிலும் குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பனை மனதார நினைத்து வழிபட வேண்டும்

3. இறைச்சி உண்ணக்கூடாது. மது அருந்தக்கூடாது. பீடி, சிகரெட் போன்ற பொருட்களை அறவே நீக்கிவிட வேண்டும்.

4. கறுப்பு, நீலம், பச்சை, காவி போன்ற கலர் வேட்டிகளையும், கலர்சட்டைகளையும் அணிய வேண்டும்.

5. குருவிடம் அணிந்த மாலையை எக்காரணத்தை கொண்டும் குளிக்கும்போது கூட கழற்ற கூடாது.

6. நமது நெருங்கிய ரத்த தொடர்பு உள்ள தாய், தந்தை, அக்காள், தங்கை, தம்பி, அண்ணன் போன்றவர்களின் மரணம் ஏற்படுமாயின் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிவிட்டுத்தான் துக்க காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

7. மாலையை கழற்றிவிட்டால் அந்த ஆண்டு மலைக்கு செல்வதை விட்டுவிட வேண்டும்

8. பெண்களின் சடங்கு நிகழ்ச்சிக்கோ, குழந்தை பிறந்த வீட்டுக்கோ செல்லக்கூடாது.

9. பெண்கள் மாதவிடாய் ஆரம்பித்து 7 நாட்கள் சென்ற பின்னர்தான் அவர்களிடம் உணவு சாப்பிட வேண்டும்.

10. மாலை அணிந்த எந்த பக்தன் வீட்டிலும் சாப்பிடலாம். மற்றவர்கள் வீட்டில் சாப்பிடக்கூடாது. பால், பழம் கொடுத்தால் சாப்பிடலாம்.

- ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News