ஆன்மிகம்

கார்த்திகை பிரம்மோற்சவம்: திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு 5 வெண்பட்டு திருக்குடைகள்

Published On 2016-11-30 08:30 GMT   |   Update On 2016-11-30 08:30 GMT
இந்து தர்மார்த்த சமிதி சார்பில் ஆண்டுதோறும், பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின்போது தாயாருக்கு வெண்பட்டு குடைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டு வருகிறது.
இந்து தர்மார்த்த சமிதி சார்பில் ஆண்டுதோறும், பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின்போது தாயாருக்கு வெண்பட்டு குடைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டு வருகிறது. பிரமோற்சவத்தின் முக்கியமான விழாவான கஜவாகன சேவை சார்பாக வெண்பட்டு குடைகள் தாயாருக்கு சமர்ப்பணம் செய்யப்படுகின்றன.

இந்த குடைகள் சுவாமி ஊர்வலத்தின் போது பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல், திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின்போது இந்து தர்மார்த்த சமிதி வெண்பட்டு குடைகளை சமர்ப் பணம் செய்து வருகிறது.

இந்த ஆண்டு கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன் னிட்டு சென்னையில் இருந்து திருச்சானூருக்கு திருக்குடைகள் நேற்று எடுத்து வரப்பட்டன. பத்மாவதி தாயார் கோயில் எதிரில் உள்ள வாகன மண்டபத்தில், இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜியிடம் இருந்து, திருமலை திருப்பதி தேவஸ்தான சிறப்பு துணை செயல் அதிகாரி முனிரத்தினம் ரெட்டி வெண்பட்டு குடைகளை பெற்றுக்கொண்டார்.

இறைவன் திருப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் கோபால் ஜிக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நிருபர்களிடம், கோபால்ஜி கூறுகையில், ‘‘திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி, இணை நிர்வாக அதிகாரி, அறங்காவலர் குழுவினர் ஆகியோரின் பூரண ஒத்துழைப்புடன் எங்கள் டிரஸ்ட் இறைபணியில் ஈடுபட்டுள்ளது. திருமலை பிரமோற்சவத்துக்கும், தாயார் பிரமோற்சவத்துக்கும் தமிழக மக்கள் சார்பாக திருக்குடைகள் வழங்கி வருகிறோம். வரும் காலங்களில் தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக யாரிடமும் எங்கள் டிரஸ்ட் நன்கொடை வசூல் செய்வது இல்லை’’ என்றார்.

Similar News