ஆன்மிகம்

பிரம்மோற்சவத்தையொட்டி காவிரி ஆற்றில் ஐயப்பசாமிக்கு ஆராட்டு நிகழ்ச்சி

Published On 2016-11-29 05:48 GMT   |   Update On 2016-11-29 05:48 GMT
பிரம்மோற்சவத்தையொட்டி காவிரி ஆற்றில் ஐயப்பசாமிக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலின் 44-வது ஆண்டு பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகளும்,அன்னதான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இக்கோவிலில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான ஐயப்பசாமிக்கு ஆராட்டு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதனையொட்டிமாலை 5மணிக்கு உற்சவ மூர்த்தியான ஐயப்பசாமிக்கு ஸ்ரீவேலிபூஜையும், அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஐயப்ப சாமிக்கு மஞ்சள்,விபூதிஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் அர்ச்சனை செய்யப்பட்டு அரவணை பாயாசம் படையலிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதைதொடர்ந்து ஐயப்ப சாமியை தந்திரிகள் காவிரிஆற்றில் இறக்கி மூன்றுமுறைநீரில் மூழ்கவைத்து ஆராட்டு நிகழ்ச்சியை விமரிசையாக நடத்தினார்கள். அப்போது கூடி இருந்த திரளானபக்தர்கள் “சாமியேசரணம் ஐயப்பா‘ என பக்தி கோஷமிட்டு வழிபட்டனர். பின்னர் காவிரியில் மூழ்கி நீராடிய ஐயப்பசாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Similar News