ஆன்மிகம்

மதுரை தண்டாயுதபாணி சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா 7 நாட்கள் நடக்கிறது

Published On 2016-10-27 09:28 GMT   |   Update On 2016-10-27 09:28 GMT
மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா 31-10-16 முதல் 6.11.16 முடிய 7 நாட்கள் நடைபெற உள்ளது.

மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி 31-10-16 முதல் 6.11.16 முடிய 7 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் நாளை (28-ந்தேதி) காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 31-ந்தேதி காலை 7 மணிக்கு விரத காப்பு கட்டுதலும், அதனை தொடர்ந்து அன்று முதல் 7 நாட்கள் மகா அபிஷேக ஆராதனையும் காலை 7.30 மணிக்குள் ருத்ரஜெப மகா அபிஷேக ஆராதனையும் காலை 7.30 மணிக்கு புஷ்ப கவச அலங்காரமும் மாலை 6 மணிக்கு சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறும்.

வருகிற 5-ந்தேதி சூரசம் ஹார நாளில் காலை 5 மணிக்கு கந்த வேள்வியும், தொடர்ந்து மகா ருத்ர அபிஷேக ஆராதனையும் இரவு 7 மணிக்கு சுவாமி 4 மாசி வீதி வழியாக பூச் சப்பரத்தில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

6-ந்தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் ருத்ரஜெப அபிஷேகஆராதனை தங்க கவசத்துடன் பாவாடை தரிசனம், தீபாராதனை, விரத பிரசாத விநியோகம் நடைபெறும். ஆலயத்தில முன்பதிவு செய்யும் பக்தர் களுக்கு 7-ந்தேதி காலை 9.15 மணிக்கு லட்சார்ச்சனை மகா வேள்வி பிரசாதம் வழங்கப்படுகிறது.

Similar News