ஆன்மிகம்

கன்னியாகுமரி ஆதிபராசக்தி தேவி மாயம்மா சமாஜத்தில் நவராத்திரி திருவிழா

Published On 2016-09-30 08:00 GMT   |   Update On 2016-09-30 08:00 GMT
கன்னியாகுமரி ஆதிபராசக்தி தேவி மாயம்மா சமாஜத்தில் நவராத்திரி திருவிழா 2-ந் தேதி தொடங்குகிறது.



கன்னியாகுமரி புதிய பஸ்நிலையத்துக்கு செல்லும் கோவளம் ரோட்டில் கலங்கரை விளக்கத்துக்கு எதிரே ஆதிபராசக்தி தேவி மாயம்மா சமாஜம் உள்ளது. 

இந்த சமாஜத்தில் நவராத்திரி திருவிழா வருகிற 2-ந் தேதி தொடங்குகிறது. இந்த விழா வருகிற 11-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. 

இதையொட்டி முதல்நாள் திருவிழாவான 2-ந் தேதி முதல் 9-ந் திருவிழாவான 10-ந்தேதி வரை தினமும் காலை 7 மணிக்கு ஸ்ரீமகாகணபதி பூஜையுடன் சிறப்பு வழிபாடு நடக்கிறது. மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை மாயம்மா திருவடி பூஜை மற்றும் திருநாம பஜனையுடன் அம்பாள் பூஜையும் 7.15 மணிக்கு அருட்பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. 

10-ம் திருவிழாவான விஜயதசமி அன்று காலை 7 மணிக்கு ஸ்ரீமகாகணபதி பூஜையுடன் சிறப்பு வழிபாடும் 8 மணிக்கு சிற்றுண்டி விருந்தும் நடக்கிறது.

9 மணி முதல் 10 மணி வரை வைகுண்டபதி ஸ்ரீநயினார் சுவாமி தர்மசாலா தலைவர் பரமகுருராஜா நெல் லையப்பன் தலைமையில் மாயம்மா திருவடி பூஜை மற்றும் திருநாம பஜனை நடக்கிறது. 10.30 மணி முதல் பகல் 12.15 மணி வரை மாயம்மா சமாஜம் நிர்வாகி மற்றும் டிரஸ்டி ராஜகுஞ்சரம் தலைமையில் ஆன்மீக பஜனை நடக்கிறது. 12.45 மணிக்கு விழா நிறைவும் அதைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு மகேஸ்வர பூஜையும் நடக்கிறது.

Similar News