ஆன்மிகம்

4 வகை இறைவனின் விக்கிரகங்கள்

Published On 2016-09-21 09:21 GMT   |   Update On 2016-09-21 09:21 GMT
இறைவனின் விக்கிரகங்களில் 4 வகைகள் உண்டு. அவை சவுமியம், போகம், யோகம், உக்கிரம் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
இறைவனின் விக்கிரகங்களில் 4 வகைகள் உண்டு. அவை சவுமியம், போகம், யோகம், உக்கிரம் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

புன்சிரிப்புடன் அழகே உருவாக வீற்றிருக்கும் ராஜராஜேஸ்வரி, பார்த்தசாரதி, மீனாட்சி அம்மன், தேவராகப் பெருமான், காமாட்சி அம்மன் போன்ற விக்கிரகங்கள் சவுமிய (சாந்தம்) வகையைச் சார்ந்தது.

தன் மனைவியுடன் சேர்ந்த ஒரே பீடத்தில் நின்றபடி அல்லது அமர்ந்தபடி அருள் பாலிக்கும் விக்கிரகங்கள், போக மூர்த்தி (மேலான ஆனந்தத்தை அளிப்பவர்கள்) என்று அழைக்கப்படுகின்றன. உதாரணமாக மனைவியுடன் இருக்கும் ராதாகிருஷ்ணன், சீதாராமன், லட்சுமி நாராயணன், உமா மகேஸ்வரர், வள்ளி– தெய்வானை சமேத சுப்பிரமணியர் போன்ற விக்கிரகங்கள்.

இதே போல் யோக நிலையில் காணப்படும் யோக நரசிம்மர், ஐயப்பன் போன்ற விக்கிரகங்கள் யோக மூர்த்திகளாவர்.

கோபத்துடன் காட்சியளிக்கும் காளி தேவி, துர்க்கை அம்மன், வீரபத்திரர், உக்கிர நரசிம்மர், சாமுண்டீஸ்வரி போன்ற விக்கிரகங்கள், உக்கிர மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றன.

Similar News