கிரிக்கெட்
null

அந்த மனசு தான் சார் கடவுள்.. காம்பீருக்கு Blank Cheque கொடுத்த ஷாருக்?

Published On 2024-05-26 15:50 GMT   |   Update On 2024-05-26 15:51 GMT
  • விண்ணப்பிக்க அவர் தயாராக இருப்பதாக தகவல்.
  • பி.சி.சி.ஐ. தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. இந்திய அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை பி.சி.சி.ஐ. பெற்று வருகிறது.

இந்த பதவியில் சரியான நபரை தேர்வு செய்வதற்காக பி.சி.சி.ஐ. பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த சமயத்தில், கவுதம் காம்பீரை கொல்கத்தா அணியில் இணைய வேண்டும் என்று ஷாருக் கான் கேட்டுக் கொண்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், கொல்கத்தா அணியுடன் பத்து ஆண்டுகள் பயணிக்க வேண்டும் என்று கூறி தற்போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் கவுதம் காம்பீருக்கு தொகை எழுதப்படாத காசோலையை ஷாருக் கான் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் கவுதம் காம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தன்னை தலைமை பயிற்சியாளராக நிச்சயம் தேர்வு செய்வார்கள் என்றால் விண்ணப்பிக்க அவர் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒருவேளை பி.சி.சி.ஐ. கவுதம் காம்பீரை பயிற்சியாளர் குழுவில் ஒருவராக நியமிக்க நினைத்தால், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்ற நிலையில்தான் கவுதம் காம்பீர் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தலைமை பயிற்சியாளர் பதவியை கவுதம் காம்பீருக்கு வழங்கும் பணிகளில் பி.சி.சி.ஐ. தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக் கான் கவுதம் காம்பீரை தனது அணியில் நீண்ட காலம் பணியாற்ற வைக்க விரும்பியதாக தெரிகிறது. இதற்காகவே அவர் கவுதம் காம்பீருக்கு தொகை நிரப்பப்படாத காசோலையை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

புதிய பயிற்சியாளர் தேர்வு குறித்து ஏராளமான பெயர்கள் வெளியான நிலையில், பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "பி.சி.சி.ஐ. மற்றும் நான் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து ஆஸ்திரேலிய வீரர்கள் யாரையும் அணுகவில்லை. இது தொடர்பான வெளியான தகவல்கள் எதுவும் உண்மையில்லை," என்று தெரிவித்தார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக வேண்டும் என்று கவுதம் காம்பீர் விரும்பினாலும், அவருக்கும் ஷாருக் கானுக்கும் இடையில் இது தொடர்பாக என்ன உரையாடல் நடைபெற்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

Tags:    

Similar News