கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை தொடர்: டோனியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்

Published On 2024-06-17 17:13 IST   |   Update On 2024-06-17 17:13:00 IST
  • பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி லீக் போட்டியில் பாபர் அசாம் 32 ரன்கள் எடுத்தார்.
  • இதன்மூலம் டோனியின் சாதனையை பாபர் முறியடித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 37-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களைச் சேர்த்தது.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் பாபர் அசாம் 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் விளாசினார்.

32 ரன்களைச் சேர்த்ததன் மூலம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை பாபர் அசாம் படைத்துள்ளார். அதன்படி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கேப்டனாக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற டோனியின் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முறியடித்துள்ளார்.

டோனி டி20 உலகக்கோப்பை தொடர்களில் 29 இன்னிங்களில் 529 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்து வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் 17 இன்னிங்ஸ்களில் 549 ரன்களை குவித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இப்பட்டியலில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 19 இன்னிங்ஸ்களில் 527 ரன்களை எடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.

Tags:    

Similar News