கிரிக்கெட் (Cricket)

எஸ்.ஏ. டி20 தொடர்: 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ்

Published On 2026-01-25 23:58 IST   |   Update On 2026-01-25 23:58:00 IST
  • டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • முதலில் ஆடிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் 158 ரன்கள் எடுத்தது.

கேப் டவுன்:

எஸ்.ஏ. டி20 லீக் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய டிவால்ட் பிரேவிஸ் 56 பந்துகளில் 101 ரன்கள் குவித்து அசத்தினார்.

சன்ரைசர்ஸ் சார்பில் மார்கோ யான்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஈஸ்ட்ரன் கேப் 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து வென்றது. 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

ஒரு கட்டத்தில் 48 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின் இணைந்த மேதிவ்-ஸ்டப்ஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். மேதிவ் 68 ரன்னும், ஸ்டப்ஸ் 63 ரன்னும் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

ஆட்ட நாயகன் விருது டிவால்ட் பிரேவிசுக்கும், தொடர் நாயகன் விருது டி காக்குக்கும் அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News