கிரிக்கெட் (Cricket)

பிக்பாஷ் லீக் தொடரில் அதிக முறை சாம்பியன்: பெர்த் ஸ்கார்சர்ஸ் அசத்தல்

Published On 2026-01-25 22:17 IST   |   Update On 2026-01-25 22:26:00 IST
  • பெர்த்தில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின.
  • டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

பெர்த்:

பிக்பாஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டி பெர்த்தில் இன்று நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித், ஜோஷ் பிலிப், ஹென்ரிக்ஸ் ஆகியோர் 24 ரன்கள் எடுத்தனர்.

பெர்த் ஸ்கார்சர்ஸ் சார்பில் டேவிட் பைன், ஜேய் ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட்டும், பியர்ட்மான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி 17.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுடன், 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. மிட்செல் மார்ஷ் அதிகபட்சமாக 44 ரன்னும், பின் ஆலன் 33 ரன்னும், ஜோஷ் இங்லிஸ் 29 ரன்னும் எடுத்தனர்.

இதன்மூலம் பிக்பாஷ் லீக் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற சாதனையை பெர்த் ஸ்கார்சர்ஸ் பெற்றது.

ஆட்ட நாயகன் விருது டேவிட் பைனுக்கும், தொடர் நாயகப் விருது சாம் ஹார்பருக்கும் அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News