கிரிக்கெட் (Cricket)
null

3வது போட்டியில் வெற்றி: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

Published On 2026-01-25 21:41 IST   |   Update On 2026-01-25 21:46:00 IST
  • டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது
  • 14 பந்துகளில் அரைசதம் அடித்து அபிஷேக் சர்மா சாதனை படைத்தார்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிலிப்ஸ் 48 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. சரவெடியாய் வெடித்த அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். யுவராஜ் சிங்கிற்கு அடுத்த படியாக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்தார்.

10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் அடித்து இந்தியா எளிதில் வெற்றி பெற்று டி20 தொடரை 3 -0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Tags:    

Similar News