கிரிக்கெட் (Cricket)

Cricket | வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வி

Published On 2026-03-11 18:41 IST   |   Update On 2026-03-11 18:41:00 IST
  • உலகக்கோப்பை தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
  • முன்னாள் கேப்டன் பாபர் அசாம், பஹர் ஜமான், சைம் அயூப், நசீம் ஷா உள்ளிட்டோர் கழற்றி விடப்பட்டனர்.

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 8 சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி அடுத்ததாக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

உலகக்கோப்பை தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாஸ் சதாகத், ஷமில் ஹூசைன், காஜி கோரி, சாத் மசூத், அப்துல் சமாத் ஆகிய புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் கேப்டன் பாபர் அசாம், பஹர் ஜமான், சைம் அயூப், நசீம் ஷா உள்ளிட்டோர் கழற்றி விடப்பட்டனர்.

இன்று டாக்காவில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வங்கதேசத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 41 ரன்கள் அடித்திருந்த பொது முதல் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் 82 ரன்கள் அடித்திருந்த போது 9 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு பகீம் அஷ்ரப் 37 ரன்கள் அடித்ததால் பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

Tags:    

Similar News