கிரிக்கெட் (Cricket)

ICC Rankings | முதல் இரண்டு இடங்களை பிடித்து அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் சாதனை

Published On 2026-03-11 17:28 IST   |   Update On 2026-03-11 17:28:00 IST
  • அபிஷேக் சர்மா 875 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறார்.
  • இஷான் கிஷன் 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை முடிவடைந்த நிலையில் ஐசிசி, டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக இறுதிப் போட்டியில் 21 பந்தில் 52 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மா 875 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.

அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 18 பந்தில் 39 ரன்கள், இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 25 பந்தில் 52 ரன்கள் விளாசிய இஷான் கிஷன் 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் 871 புள்ளிகள் பெற்றுள்ளார். அபிஷேக் சர்மாவை தொட இன்னும் 4 புள்ளிகள் மட்டுமே தேவை.

பாகிஸ்தானின் சஹிப்சதா ஃபர்ஹான் 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்க சரிந்துள்ளார். திலக் வர்மா 6-வது இடத்தில் இருந்து 7-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

நியூசிலாந்தின் டிம் செய்பெர்ட் 4 இடங்களில் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். சஞ்சு சாம்சன் 18 இடங்களில் முன்னேறி 22-வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சு தரவரிசையில் வருண் சக்ரவர்த்தி முதல இடத்தில் இருநது 2-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார். பும்ரா 7-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Tags:    

Similar News