ஐ.பி.எல்.(IPL)
null

நாளை வெளியாகும் IPL முதல் கட்ட அட்டவணை... முதல் போட்டியில் CSK Vs RCB மோதல்?

Published On 2026-03-11 16:17 IST   |   Update On 2026-03-11 16:51:00 IST
  • ஐபிஎல் தொடர் வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
  • 2 ஆவது போட்டியில் பஞ்சாப் - குஜராத் அணிகள் மோத வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது.

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வருகிறது.

இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான முதல்கட்ட அட்டவணை நாளை (12-ந்தேதி) அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் சென்னை அணி மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

29ம் தேதி நடைபெறும் பஞ்சாப் முல்லான்பூரில் நடைபெறும் 2 ஆவது போட்டியில் பஞ்சாப் - குஜராத் அணிகள் மோத வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News