என் மலர்
நீங்கள் தேடியது "ஐபிஎல் அட்டவணை"
- சிஎஸ்கே அணியின் போட்டிகள் ராஞ்சி மைதானத்திற்கு மாற்றப்படும் என தகவல் வெளியானது.
- சென்னை அணியின் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.
19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வருகிறது.
இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான முதல்கட்ட அட்டவணை நாளை (12-ந்தேதி) அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் சென்னை அணி மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே தேர்தல் காரணமாக சிஎஸ்கே அணியின் போட்டிகள் ராஞ்சி மைதானத்திற்கு மாற்றப்படும் என தகவல் வெளியானது. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.
இந்நிலையில், சிஎஸ்கே அணியின் போட்டிகள் ராஞ்சி மைதானத்திற்கு மாற்றப்படும் என்ற தகவல் உண்மையல்ல எனவும் அப்படி எந்த வழிகாட்டுதலையும் ஐபிஎல் நிர்வாகம் எங்களுக்கு கொடுக்கவில்லை என்று சிஎஸ்கே அணியின் CEO காசி விஸ்வநாதன் தெரிவித்தார். இதனால் சென்னை அணியின் அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- ஐபிஎல் தொடர் வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
- 2 ஆவது போட்டியில் பஞ்சாப் - குஜராத் அணிகள் மோத வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது.
19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வருகிறது.
இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான முதல்கட்ட அட்டவணை நாளை (12-ந்தேதி) அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் சென்னை அணி மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
29ம் தேதி நடைபெறும் பஞ்சாப் முல்லான்பூரில் நடைபெறும் 2 ஆவது போட்டியில் பஞ்சாப் - குஜராத் அணிகள் மோத வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது.
- ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை 2 கட்டமாக அறிவிக்க முடிவு செய்துள்ளோம்.
- சட்டசபை தேர்தல் தவிர வேறு எந்த காரணங்களாலும் தற்போது கிரிக்கெட் வாரியம் பாதிக்கப்படவில்லை.
19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வருகிறது.
இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான முதல்கட்ட அட்டவணை நாளை (12-ந்தேதி) அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் தேவஜித் சைகியா கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை 2 கட்டமாக அறிவிக்க முடிவு செய்துள்ளோம். 20 நாட்களை உள்ளடக்கிய முதல் கட்ட அட்டவணை நாளை (12-ந்தேதி) அல்லது நாளை மறுநாள் (13-ந்தேதி) வெளியிடுவோம்.
2-வது கட்ட அட்டவணை 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு வெளியிடுவோம்.
போட்டிக்கான நகரங்களில் இருந்து உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவை வந்தவுடன் முதல் கட்ட தேதிகளை அறிவிப்போம். ராய்ப்பூர் புதிய மைதானமாக இருக்கும்.
சட்டசபை தேர்தல் தவிர வேறு எந்த காரணங்களாலும் தற்போது கிரிக்கெட் வாரியம் பாதிக்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் முழு அட்டவணை வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஐ.பி.எல். போட்டிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்பதை அவர் தெளிவுப்படுத்தினார்.
- இதுவரை எவ்வித தெளிவான அறிவிப்பும் வெளியாகவில்லை.
- ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெறும்.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்க இருக்கிறது. எனினும், 2024 ஐ.பி.எல். தொடர் எப்போது துவங்கும் என்பது பற்றி இதுவரை எவ்வித தெளிவான அறிவிப்பும் வெளியாகவில்லை.
விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில், ஐ.பி.எல். தலைவர் அருன் துமால் 2024 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
மேலும் மார்ச் 22-ம் தேதி முதல் ஐ.பி.எல். போட்டிகள் துவங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக ஐ.பி.எல். 2024 தொடரின் முதல் 15 நாட்களுக்கான அட்டவணையை மட்டும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தொடரின் மீதமுள்ள போட்டிகள் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து திட்டமிடப்பட இருக்கிறது. 2024 ஐ.பி.எல். போட்டிக்காண அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில், கடந்த ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதலாம் என்றும் கூறப்படுகிறது.
- முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு அணியும் மோதுகிறது.
- இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான போட்டி அட்டவணை இன்று வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. அந்த வகையில் முதல் 15 நாட்களுக்கான போட்டி அட்டவணை இன்று வெளியாகியது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் தற்போது வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2-ம் கட்ட அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு அணியும் மோதுகிறது. இதனை தொடர்ந்து சென்னை அணி மார்ச் 26-ந் தேதி குஜராத் அணியுடன் மோதுகிறது. இந்த 2 போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து சென்னை அணி மார்ச் 31-ந் தேதி டெல்லியுடனும் ஏப்ரல் 5-ந் தேதி சன்ரைசர்ஸ் அணியுடனும் மோதுகிறது.
ஒரு அணி தலா 4 அணியுடன் மோதும் என்ற கணக்கில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.