ஐ.பி.எல்.(IPL)

IPL 2026 | ஐ.பி.எல் போட்டி முதல் கட்ட அட்டவணை நாளை அறிவிப்பு

Published On 2026-03-11 14:57 IST   |   Update On 2026-03-11 14:57:00 IST
  • ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை 2 கட்டமாக அறிவிக்க முடிவு செய்துள்ளோம்.
  • சட்டசபை தேர்தல் தவிர வேறு எந்த காரணங்களாலும் தற்போது கிரிக்கெட் வாரியம் பாதிக்கப்படவில்லை.

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வருகிறது.

இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான முதல்கட்ட அட்டவணை நாளை (12-ந்தேதி) அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் தேவஜித் சைகியா கூறியதாவது:-

ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை 2 கட்டமாக அறிவிக்க முடிவு செய்துள்ளோம். 20 நாட்களை உள்ளடக்கிய முதல் கட்ட அட்டவணை நாளை (12-ந்தேதி) அல்லது நாளை மறுநாள் (13-ந்தேதி) வெளியிடுவோம்.

2-வது கட்ட அட்டவணை 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு வெளியிடுவோம்.

போட்டிக்கான நகரங்களில் இருந்து உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவை வந்தவுடன் முதல் கட்ட தேதிகளை அறிவிப்போம். ராய்ப்பூர் புதிய மைதானமாக இருக்கும்.

சட்டசபை தேர்தல் தவிர வேறு எந்த காரணங்களாலும் தற்போது கிரிக்கெட் வாரியம் பாதிக்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் முழு அட்டவணை வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஐ.பி.எல். போட்டிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்பதை அவர் தெளிவுப்படுத்தினார்.

Tags:    

Similar News