கிரிக்கெட் (Cricket)
Suryakumar Yadav | மகாராஷ்டிரா முதல்வர் இல்லத்தில் சூர்யகுமார், சிவம் துபே - புகைப்படங்கள் வைரல்
- மூன்றாவது முறையாக இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது.
- இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ. 141 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு.
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து மழை தொடர்கிறது. கோப்பை வென்ற இந்திய வீரர்கள் சொந்த ஊர்களுக்கும் திரும்பும் நிலையில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே மகாராஷ்டிரா மாநிலத்துக்கு திரும்பினர்.
கோப்பை வென்று திரும்பிய நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தனர். இருவருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கோப்பை வென்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய கேப்டன் சூர்யகுமார் மற்றும் சிவம் துபே மகாராஷ்டிர முதல்வரை சந்தித்து தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.