கிரிக்கெட் (Cricket)
T20 WorldCup | 'ஆவேஷம்' பட காட்சியை ரீக்ரியேட் செய்த வருண் சக்ரவர்த்தி - வைரல் வீடியோ
- டி20 உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
- இதற்கு முன்பு 2007, 2024-ம் ஆண்டுகளில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன்பு 2007, 2024-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பையுடன் 'ஆவேஷம்' பட காட்சியை தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி! ரீக்ரியேட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.