விளையாட்டு

#T20WorldCup மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு - பிசிசிஐ தாராளம்

Published On 2026-03-10 11:51 IST   |   Update On 2026-03-10 11:51:00 IST
  • 20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
  • உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.21.5 கோடி பரிசாக கிடைத்தது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன்பு 2007, 2024-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.

மேலும் தொடர்ச்சியாக 2 முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையையும் புரிந்தது. அதோடு போட்டியை நடத்திய நாடுகளில் முதல் தடவையாக கோப்பையை வென்ற நாடு எனவும் இந்தியா சாதித்தது. உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.21.5 கோடி பரிசாக கிடைத்தது.

இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையை மூன்றாவது முறையாக வென்ற சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.131 கோடி பரிசுத்தொகையை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. 

Tags:    

Similar News