விளையாட்டு
null

டி20 உலகக்கோப்பை முடிந்த கையோடு நீண்டநாள் தோழியை கரம்பிடிக்கும் குல்தீப் யாதவ்!

Published On 2026-03-10 15:52 IST   |   Update On 2026-03-10 15:56:00 IST
  • முசோரி மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு விடுதியில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது
  • பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தனது நீண்டநாள் தோழியான வான்ஷிகாவை வரும் 14ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள முசோரி மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு விடுதியில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது. நிச்சயதார்த்தம் கடந்தாண்டு ஜூன் மாதம் லக்னோவில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடைபெற்றது.

முதலில் நவம்பர் 2025-இல் நடைபெறவிருந்த இந்தத் திருமணம், 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டிகளில் குல்தீப் விளையாடிய காரணத்தினால் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்தநிலையில், திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருமணத்திற்கு முந்தைய சடங்குகளான ஹல்தி மற்றும் மெஹந்தி விழாக்கள் மார்ச் 13 அன்று தொடங்கும் என அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இந்தத் திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தார். 


Tags:    

Similar News