null
Arshdeep Singh | டேரில் மிட்செல் மீது பந்தை வீசிய அர்ஷ்தீப் சிங்கிற்கு ஐசிசி அபராதம் விதிப்பு..!
- அடுத்தடுத்து சிக்ஸ் அடித்ததால் அர்ஷ்தீப் சிங் விரக்தி அடைந்தார்.
- அடுத்த பந்தை தடுத்தாட, பந்தை பிடித்து டேரில் மீட்செல் மீது வீசினார்.
இந்தியா- நியூசிலாந்து இடையில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் களம் இறங்கிய இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது. பின்னர், நியூசிலாந்து அணி 159 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
டேரில் மிட்செல் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, 11-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் விளாசினார் டேரில் மிட்செல். இதனால் அர்ஷ்தீப் சிங் விரக்தி அடைந்தார். அடுத்த பந்தை தடுத்தாடினார். பந்து அர்ஷ்தீப் சிங்கிடம் சென்றது. கோபத்தில் டேரில் மிட்செல் மீது பந்தை தூக்கி வீசினார். அவரது தொடைப்பகுதியில் பந்து தாக்கியது. இதனால் கோபம் அடைந்த டேரில் மிட்செல் அர்ஷ்தீப் சிங்கை திட்டியவாறு முறைத்துக் கொண்டு வந்தார். அத்துடன் நடுவரிடம் புகார் அளித்தார்.
அதன்பின் சூர்யகுமார் யாதவ் டேரில் மிட்செலை சமாதானப் படுத்தினார். அர்ஷ்தீப் சிங்கும் மன்னிப்பு கேட்டார்.
இருந்த போதிலும், அர்ஷ்தீப் வீரர்களின் நன்னடத்தை விதியை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, ஐசிசி அவருக்கு போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபாரம் விதித்துள்ளது. மேலும், விளையாடு தடைவிதிப்பதற்கான தகுதி இழப்பு புள்ளி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மாதங்களுக்குள் அர்ஷ்தீப் சிங் 4 அல்லது அதற்கு மேல் தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றால் போட்டியில் பங்கேற்க தடைவிதிக்கப்படும்.