null
3வது டி20 போட்டி: இந்தியாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
- டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதிகபட்சமாக பிலிப்ஸ் 48 ரன்கள் அடித்தார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 21-ம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்திலும், 23-ம் தேதி நடந்த 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிலிப்ஸ் 48 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.