2026 டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
- 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் வங்கதேசத்தை நீக்கி ஸ்காட்லாந்தை ஐசிசி சேர்த்தது.
- பாகிஸ்தான் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலக போவதாக மிரட்டல் விடுத்து இருந்தது
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடக்கிறது.
பாதுகாப்பு காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாட இந்தியா செல்லமாட்டோம் என்று வங்கதேசம் அறிவித்தது. இதனால் வங்கதேசத்தை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்தை சேர்த்து ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முடிவு எடுத்தது.
இதற்கிடையே வங்காளதேசத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலக போவதாக மிரட்டல் விடுத்து இருந்தது. இந்நிலையில் வங்காள தேசத்துக்கு ஆதரவாக உலக கோப்பையில் பங்கேற்பது குறித்து சந்தேகத்தை கிளப்பி அச்சுறுத்தல் விடுத்த பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி. கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக தனிமைப்படுத்தப்படும் என்று எச்சரித்தது.
இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடருக்கு சல்மான் அகா தலைமையில் 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் அறிவித்தது. பாகிஸ்தான் அணி அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
2026 டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:
சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் ஆசம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஜமான், கவாஜா முகமது நஃபே, முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான், சாஹிப்சாதா, ஷாஹிம்ஹானி ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.