அறையில் வேறு பெண்ணுடன் பலாஷ்.. அடித்துத் துவைத்த வீராங்கனைகள் - ஸ்மிருதி திருமணத்தில் நடந்தது இதுதான் - நண்பர் பகீர்
- திருமணச் சடங்குகளின் போது நான் அங்கு தான் இருந்தேன்.
- அவரின் மொத்த குடும்பமும் ஏமாற்றுக்காரர்கள் தான்.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவரது காதலர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பலாஷ் முச்சலுக்கும் கடந்த நவ.23 திருமணம் நடைபெறவிருந்தது.
ஆனால் ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் திருமணம் கைவிடப்பட்டதாக மந்தனா அறிவித்தார்.
பலாஷ் முச்சல்க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருந்ததே திருமணம் கைவிடப்பட காரணம் என ஊகங்கள் எழுந்தன.
இந்நிலையில் ஸ்மிருதியின் சிறுவயது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான விக்ஞான் மானே தேசிய ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் பேட்டி அளித்தார்.
அதில் பேசிய அவர், 2025 நவம்பரில் நடந்த திருமணச் சடங்குகளின் போது நான் அங்கு தான் இருந்தேன். பலாஷ் முச்சல் வேறொரு பெண்ணுடன் ஒரு அறையில் அந்தரங்கமாக இருந்தபோது பிடிபட்டார்.
பலாஷின் இந்தச் செயலால் ஆத்திரமடைந்த அங்கிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் அவரை தாக்கினர். அவரின் மொத்த குடும்பமும் ஏமாற்றுக்காரர்கள் தான்.
படம் எடுக்க போவதாக பலாஷ் என்னிடம் ரூ.40 லட்சம் வாங்கினார். ஆனால் திருமண முறிவிற்குப் பிறகு பலாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பணத்தைத் தராமல் என்னை ஏமாற்றினர்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பலாஷ் முச்சல், "என் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இதனை நான் சட்டரீதியாகச் சந்திப்பேன்" என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.