WPL 2026: 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது டெல்லி
- முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய டெல்லி அணி 15.4 ஓவரில் 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 15-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 38 ரன்கள் எடுத்தார்.
டெல்லி அணி சார்பில் நந்தின் ஷர்மா 3 விக்கெட்டும், ஸ்ரீ சரணி, சினேலி ஹென்றி, மரிஜானே காப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 15.4 ஓவரில் 113 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி 3வது வெற்றியைப் பதிவுசெய்தது. லாரா வோல்வார்ட் 42 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
நடப்பு தொடரில் பெங்களூரு அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.