பிக்பாஷ் லீக் தொடர்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சிட்னி சிக்சர்ஸ்
- முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவரில் 198 ரன்கள் எடுத்தது.
- அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார்.
மெல்போர்ன்:
பிக்பாஷ் லீக் தொடரின் லீக் சுற்றுகள் மற்றும் தகுதிச்சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ், ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ர ஹோபர்ட் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடி அரை சதமடித்து 65 ரன்கள் எடுத்தார்.
ஹோபர்ட் அணி சார்பில் ரிலீ மெரிடித் 3 விக்கெட்டும், ரிஷாத் ஹொசைன், பில்லி ஸ்டான்லேக் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்ரி என்ற இலக்குடன் விளையாடிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 17.5 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 57 ரன் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
சிட்னி சிக்சர்ஸ் அணி சார்பில் பென் துவார்ஷியஸ் 3 விக்கெட்டும், ஜோயல் டேவிஸ், மிட்செல் ஸ்டார்க், சீன் அபாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி, பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியுடன் மோதுகிறது. இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதுவது 6வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.