கிரிக்கெட்

தலை வணங்குகிறேன்...ரோகித் சர்மாவை பாராட்டிய இலங்கை ஜாம்பவான்

Published On 2023-01-11 06:09 GMT   |   Update On 2023-01-11 06:09 GMT
  • இலங்கை அணி கேப்டன் சனகா 98 ரன்களில் இருந்த போது முகமது ஷமியால் மன்கட் முறையில் ரன் அவுட் செய்யப்பட்டார்.
  • பல கேப்டன்கள் இதைச் செய்ய மாட்டார்கள் என இலங்கை முன்னாள் வீரர் மேத்யூஸ் பாராட்டி உள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 373 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து 374 என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டியில் இலங்கை அணி கேப்டன் சனகா 98 ரன்களில் இருந்த போது முகமது ஷமியால் மன்கட் முறையில் ரன் அவுட் செய்யப்பட்டார். அதை சோதிப்பதற்காக நடுவரும் 3-வது நடுவரை அணுகினார். அந்த சமயத்தில் வேகமாக ஓடி வந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா சிரித்த முகத்துடன் முகமது சமியிடம் சென்று பேசி இப்படி அவுட் தேவையில்லை என தெரிவித்தார்.

அவரது வார்த்தைகளை புரிந்து கொண்ட முகமது ஷமி நடுவரிடம் சென்று தாம் முன்வைத்த அவுட்டை வாபஸ் பெறுவதாக கூறினார். இதனால் அடுத்த 2 பந்துகளில் பவுண்டரி மற்றும் சிக்சர் விளாசி தனது 2-வது சதத்தை பதிவு செய்தார்.

சனாகாவுக்கு எதிரான மன்கட் அவுட்டை வாபஸ் பெற்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை இலங்கை ஜாம்பவான் பாராட்டி உள்ளார்.


இந்நிலையில் அவர் கூறியதாவது:-

நடுவரிடம் ரன் அவுட்டை வாபஸ் பெற்ற ரோகித் சர்மா ஸ்போர்ட்மேன்ஷிப்பின் உண்மையான வெற்றியாளர். அவரின் செயலுக்கு தலை வணங்குகிறேன்.

மேலும் ஒரு இலங்கை அணியின் முன்னாள் வீரர் கூறியதாவது:-


பல கேப்டன்கள் இதைச் செய்ய மாட்டார்கள். விதிமுறை சொன்னாலும் மேல்முறையீட்டை வாபஸ் பெற்றதற்காக சிறந்த விளையாட்டுத்திறனை வெளிப்படுத்துகிறது. ஹேட்ஸ் ஆஃப் ரோகித் சர்மா.

இவ்வாறு கூறினார்கள்.

Tags:    

Similar News