சினிமா

சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ

Published On 2018-11-09 08:16 GMT   |   Update On 2018-11-09 08:21 GMT
விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதால் பிரச்சனை முடிந்தது என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். #Sarkar #Vijay
நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த படம் முதல் நாளே வசூலில் சாதனை படைத்தது.

இப்படத்தில் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யும் வகையில் வசனங்களும், காட்சிகளும் அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. சர்ச்சைக்குரிய வசனங்கள், காட்சிகளை நீக்க வலியுறுத்தி, நேற்று மாலை தமிழகம் முழுவதும் சர்கார் படத்தை எதிர்த்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திரை அரங்குகளின் வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. 

இதையடுத்து சர்கார் படம் திரையிடப்பட்டிருந்த திரை அரங்குகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள கோமளவல்லி என்று அழைக்கப்படும் காட்சியையும், தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறி மிக்சி, கிரைண்டர் தீ வைக்கப்படும் காட்சியையும் மறு தணிக்கையில் தணிக்கை குழுவினர் நீக்கியுள்ளனர்.



காட்சிகள் நீக்கியதால் சர்கார் பிரச்சனை முடிந்தது என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். முதலமைச்சர் பழனிசாமியுடன் நடந்த ஆலோசனைக்குப் பின் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். 
Tags:    

Similar News